சுதந்திர தின அறிவிப்புக்காக வரும் 14ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை
சுதந்திர தின அறிவிப்புக்காக வரும் 14ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை
ADDED : ஆக 06, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 14ம் தேதி நடக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில், அரசு திட்டங்கள், கொள்கை முடிவுகள், புதிய சட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப் படுவது வழக்கம்.
சட்டசபை தேர்தல், 2026 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளதால், பல்வேறு புதிய திட்டங்களை துவங்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
இதற்கு ஒப்புதல் பெறும் வகையில், தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 14ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து, 15ம் தேதி சுதந்திர தின விழாவில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.