போராட்டத்தில் ஈடுபடுவோர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு
போராட்டத்தில் ஈடுபடுவோர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு
ADDED : ஆக 19, 2024 07:03 AM

சென்னை : தமிழக மின் வாரியத்தில், 'கேங்மேன்' பதவியில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சென்னை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், 22ம் தேதி முதல் மண்டல, தலைமை பொறியாளர் அலுவலகம் முன், வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இன்று வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு, 'வேலையில்லை சம்பளம் இல்லை' விதியின் கீழ் சம்பளம் பிடித்தம் செய்யுமாறு பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்யுமாறும்; இன்றும், 22ம் தேதியும் காலை, 10:45 மணிக்குள் வருகை பதிவேட்டை முடித்து, வேலைக்கு வந்தவர், வராதவர்களின் விபரத்தை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

