sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு

/

இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு

இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு

இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு

5


ADDED : அக் 12, 2024 07:55 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:55 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்படுவதுடன் சிறையில் அடைக்கப்படுவதால் சித்ரவதைக்கும் ஆளாகின்றனர்.

ராமேஸ்வரம் முதல் நாகபட்டினம் வரை 4000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கின்றனர். ராமேஸ்வரம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை இந்திய கடல் எல்லை 25 முதல் 40 கி.மீ.,ல் முடிகிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் குறுகிய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது சில நேரம் மீன்வரத்திற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் ராமேஸ்வரம் பகுதி உள்ளிட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி, படகுகளை கப்பலை கொண்டு மோதி மூழ்கடித்து விடுகின்றனர். மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தும் சித்ரவதை செய்கின்றனர்.

2000 மீனவர்கள் கைது


1984 முதல் 2009 வரை இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் நடந்த நேரத்தில் பாக்ஜலசந்தி கடலில் புலிகளின் கடற்படை பிரிவு வலுவாக இருந்தது. இதை பயன்படுத்தி இப்பகுதி மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்தனர். இதன் மூலம் மீனவர்கள் வருவாயை பூர்த்தி செய்த நிலையில் 2009ல் விடுதலை புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டதும், இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்கள் பக்கம் திரும்பியது. 2009 முதல் தற்போது வரை 400 படகுகள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2015க்கு பின் 300 படகுகள், 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 2015க்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 2015க்கு பின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இப்படகுகளை இலங்கை அரசு தேசிய உடைமையாக அறிவித்தது.

மேலும் மீனவர்களுக்கு சிறையில் சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்காமல் கடுங்காவல் தண்டனை வழங்கியும், அபராதம் விதிக்கவும் துவங்கியது. இதனால் படகுகளை இழந்த உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடனில் சிக்கி தவிக்கும் அவலம் ஏற்பட்டது.

சிறை தண்டணை பெற்ற மீனவர்களை இரும்பு சங்கிலிகளால் பிணைத்தும், மொட்டையடித்து அவமானப்படுத்தியும், தொற்று நோய், அம்மை நோயால் பாதிக்கும் அளவிற்கு சித்திரவதைக்கும் உள்ளாக்கி வருகிறது.

இவர்களை விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் 30 முதல் 60 நாட்கள் வரை இலங்கை அரசு சிறையில் அடைத்து விடுகிறது.

தீர்வு தான் என்ன : இந்திய, இலங்கை உயர் அதிகாரிகள் முன்னிலையில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வாரத்தில் இரு நாட்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், மற்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கவும் உடன்பாடு ஏற்படுத்தினால் குறுகிய கடல் எல்லை கொண்ட பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு காண முடியும். இல்லையெனில் தமிழக மீனவர்கள் ஒடுக்கப்பட்டு மீன்பிடி தொழில் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் உள்ளது என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us