ADDED : பிப் 20, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும், 2030க்குள் தமிழகத்தை, 1 டிரில்லியன் அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற, தற்போதைய மின்தேவையை விட, இரு மடங்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும். இந்த இலக்கை அடைய, வரும் காலங்களில் பசுமை மின்சாரம் முக்கிய பங்காற்றும்
வரும், 2030க்குள், 10,000 கோடி யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை மின் உற்பத்தியை தமிழகத்தில் உருவாக்கி, நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற உரிய திட்டங்கள் வகுக்கப்படும்; அந்த இலக்கை அடைய, முதல் கட்டமாக, புதிய பசுமை மின்சார நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில், 11,500 மெகாவாட் திறன் உள்ள நீரேற்று மின் திட்டங்கள், பொது மற்றும் தனியார் பங்கேற்புடன், 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும்.

