தமிழக ஐ.என்.டி.யு.சி., தலைவர் தேர்தல் 16ல் நடத்த முடிவு
தமிழக ஐ.என்.டி.யு.சி., தலைவர் தேர்தல் 16ல் நடத்த முடிவு
ADDED : நவ 01, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக ஐ.என்.டி.யு.சி., தலைவர் தேர்தல், வரும் 16ம் தேதி நடத்தப்பட உள்ளது.
தமிழக ஐ.என்.டி.யு.சி., அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மூத்த நிர்வாகி கல்யாணராமன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். வாழப்பாடி கர்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத் தலைவர் தேர்தலை, வரும் 16ம் தேதி சென்னை அல்லது செங்கல்பட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

