ADDED : நவ 01, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., அரசு மது விற்பனையில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து மது உற்பத்தி ஆலைகளும் நேரடியாக, மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளன.
இதனால், மது விற்பனையை பெருக்கி, மதுவுக்கு இளைஞர்களை அடிமையாக்கி உழைக்கும் திறனை வீணாக்கி உள்ளனர். இதை எதிர்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மட்டும் தான் போராடுகிறார். அவருக்கு ஆதரவாக இரண்டரை கோடி தொண்டர்கள் தியாகம் செய்ய தயாராக உள்ளனர்.அ.தி.மு.க.,வை விட்டுச் சென்று துரோகம் செய்தவர்கள், கட்சியை விட்டு சென்றோர், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவர். அப்படி செல்லாமல் போனோர் ஒன்று சேர்ந்துள்ளனர். எத்தனை பேர் சேர்ந்தாலும், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது. வரும் சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.,வே வெல்லும்; பழனிசாமியே முதல்வர் ஆவார். - பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க.,

