பருத்தி ஆடை ஏற்றுமதி தமிழகம் முன்னிலை 6 மாதங்களில் ரூ.14,424 கோடி வர்த்தகம்
பருத்தி ஆடை ஏற்றுமதி தமிழகம் முன்னிலை 6 மாதங்களில் ரூ.14,424 கோடி வர்த்தகம்
ADDED : டிச 10, 2025 01:41 AM

திருப்பூர்: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் பருத்தி ஆடை ஏற்றுமதியில், 14,424 கோடி ரூபாய் பங்களிப்புடன் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் இருந்து, ஆண்டுக்கு, 1.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களில் இருந்தும், ஆடை ஏற்றுமதி நடக்கிறது. ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 36 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
நாடு முழுவதும், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்து வருகிறது. உ.பி. முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம், 5வது இடத்தில் இருக்கிறது.
பருத்தி ஆடை ஏற்றுமதி
(2025 ஏப். - செப்.)(ரூ/கோடியில்)
-------------------------
தமிழ்நாடு - 14,424
கர்நாடகா - 5,655
உத்தர பிரதேசம் - 3,986
ஹரியானா - 3,985
மகாராஷ்டிரா - 1,470
டில்லி - 1,253
பஞ்சாப் - 696
செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி
(2025 ஏப். - செப்.)(ரூ/கோடியில்)
----------------------------
உத்தர பிரதேசம் - 2,323
ஹரியானா - 1,505
மகாராஷ்டிரா - 1,113
டெல்லி - 1,052
தமிழகம் - 965
கர்நாடகா - 948
பஞ்சாப் - 548

