ஒரு குடும்ப பிடியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்
ஒரு குடும்ப பிடியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்
ADDED : டிச 09, 2024 04:35 AM

த.வெ.க., தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு, 'நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை' என்று கூறுகிறார் துணை முதல்வர் உதயநிதி. இப்படி எல்லாரும் சொல்லி, அவருடைய படங்களை புறக்கணித்திருந்தால், அவர் நடித்த ஒரு படம் கூட வெற்றி பெற்றிருக்காது.
தி.மு.க., அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும். இரட்டை இலையை மட்டும் காட்டி ஏமாற்றலாம் என சிலர் போடும் கணக்குகள் பலிக்காது. சிலருடைய தனிப்பட்ட செயல்பாடுகளால், அ.தி.மு.க., என்னும் மாபெரும் இயக்கம் பலவீனப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் மக்களாட்சியை கொண்டுவர, ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும். அதை மக்கள் உணர்ந்துள்ளதால், அவர்கள் பா.ஜ., கூட்டணிக்குத்தான் ஓட்டளிப்பர். பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளன.
- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,