மின் வாகனங்களுக்கான 'சார்ஜிங்' வசதி 1413 மையங்களுடன் தமிழகம் 5ம் இடம்
மின் வாகனங்களுக்கான 'சார்ஜிங்' வசதி 1413 மையங்களுடன் தமிழகம் 5ம் இடம்
ADDED : டிச 22, 2024 02:49 AM
சென்னை:மின்சார வாகனங்களுக்கான, 'சார்ஜிங்' வசதி அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம், 1,413 மையங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மின் வாகனங்களுக்கு தடையின்றி 'சார்ஜிங்' வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ.,க்கு ஒன்று மாநகரங்களில் ஒவ்வொரு, 3 கி.மீ.,க்கு ஒன்று என்ற வீதத்தில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
அதற்கு ஏற்ப, இந்தியன் ஆயில், எனர்ஜி எபிஷியன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், சார்ஜிங் மையங்களை அமைக்கின்றன. தமிழக மின் வாரியம், 100 துணை மின் நிலையங்களின் வளாகங்களில், சார்ஜிங் மையங்கள் அமைக்கிறது.
நாடு முழுதும் 25,202 சார்ஜிங் மையங்கள் உள்ளன. தமிழகம் 1,413 மையங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா, 5,765 சார்ஜிங் மையங்களுடன் முதலிடம், மஹாராஷ்டிரா 3728 உடன் ௨வது, உ.பி., 1989 மையங்களுடன் மூன்றாவது இடத்திலும், டில்லி 1941 உடன் நான்காவது இடத்திலும் உள்ளன.