தமிழக தொழில்நுட்ப மையம் ஆஸி., பல்கலையுடன் ஒப்பந்தம்
தமிழக தொழில்நுட்ப மையம் ஆஸி., பல்கலையுடன் ஒப்பந்தம்
ADDED : அக் 10, 2025 12:21 AM
சென்னை:தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பரிமாற்றத்துக்காக, மெல்போர்ன் பல்கலையுடன், தமிழக தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக தொழில்நுட்ப மையம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை இடையே, தொழில்நுட்ப பரிமாற்றம், புத்தாக்க முயற்சிகள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பரிமாற்றம், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் ஒத்தழைப்பு போன்றவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் முன்னிலையில், இது நடைபெற்றது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப மையத்தின், தலைமை செயல் அலுவலர் வனிதா வேணுகோபால் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, தொழில்நுட்ப பரிமாற்றத்தில் வளர்ச்சி ஏற்படும்,'' என்றார்.
இந்நிகழ்வில், மெல்போர்ன் பல்கலை துணைவேந்தர் மைக்கேல் வெஸ்லி, ஆஸ்திரேலியாவின் தலைமை துாதர் சிலை ஜாகி, தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் பிரஜேந்திர நவ்நித் ஆகியோர் பங்கேற்றனர்.