sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., இல்லாத தமிழகமே மக்களின் ஒரே கனவு: பா.ஜ.,

/

 தி.மு.க., இல்லாத தமிழகமே மக்களின் ஒரே கனவு: பா.ஜ.,

 தி.மு.க., இல்லாத தமிழகமே மக்களின் ஒரே கனவு: பா.ஜ.,

 தி.மு.க., இல்லாத தமிழகமே மக்களின் ஒரே கனவு: பா.ஜ.,

1


ADDED : ஜன 10, 2026 06:09 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தி.மு.க., இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. இந்த கனவு வெகு விரைவில் நிறைவேறும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற பெயரில், தமிழகத்தில் புதியதொரு திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி இருக்கிறார்.

நான்கரை ஆண்டு களுக்கு பின், இப்போது தான் துாக்கத்தில் இருந்து விழித்திருக்கும் முதல்வருக்கு, தமிழக மக்களின் கனவு பட்டியலை நாங்கள் சொல்கிறோம்.

சீரான சட்டம் - ஒழுங்கு

சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்

தி.மு.க.,வின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்

அரசு துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்

ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்

துாய்மை பணியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்

அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்

விசாரணை கைதிகள், புலம் பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப் படாத தமிழகம்

கல்வி கடன் தள்ளுபடி; தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்; காஸ் சிலிண்டர் விலை குறைப்பு என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றாத அரசு

ஹிந்து மத வெறுப்பில்லாத அரசு.

மொத்தத்தில், தி.மு.க., இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. இந்த கனவு வெகு விரைவில் நிறைவேறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us