ADDED : ஜூலை 17, 2025 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள், தரையில் படுக்க வைக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மருத்துவமனை வளாகத்தில், மலைபோல் குவிந்திருக்கும் மருத்துவக் கழிவுகளால், சிகிச்சைக்கு வருவோர், புதுவகை நோய்களுடன் திரும்பிச் செல்லும் அவலம் நிலவுகிறது.
அரசு மருத்துவமனைகளில் தரையில் படுக்கும் நோயாளிகள்; குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமை போன்றவை, தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் செயல் இழந்து விட்டதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 'சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலம் தமிழகம்' என்ற வெற்று விளம்பரத்தை, ஓரம்கட்டி வைத்துவிட்டு, மருத்துவர், செவிலியர் தட்டுப்பாட்டை நீக்கி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,