ADDED : ஜூலை 03, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்திய விமானப் படையின் டில்லி தலைமையக நிர்வாக பொறுப்பு அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த ஏர் மார்ஷல் எஸ்.சிவக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கோவையை சேர்ந்தவர். பள்ளி மற்றும் கல்லுாரி கல்வியை சென்னையில் பயின்றார்.
கடந்த 1990ம் ஆண்டு விமானப்படையில் அதிகாரியாக இணைந்தார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில் விமானப் படை கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி உட்பட பல முக்கியப் பதவிகளை நிர்வகித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில், ஐ.நா., படையில் இந்திய விமானப் படை பிரதிநிதியாக பணியாற்றி உள்ளார்.
விமானப் படை தலைமையகத்தில் நிர்வாக தலைமை இயக்குநராக பதவி வகித்து வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று விமானப்படை டில்லி தலைமையக நிர்வாக பொறுப்பு அதிகாரிகயாக பொறுப்பேற்றுள்ளார்.

