ADDED : ஆக 05, 2025 07:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரும் ஆக., 25ம் தேதி மதுரையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,25ம் தேதி மதுரையில் நடக்கும் என நடிகர் விஜய் அறிவித்துஇருந்தார். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி, மாநாட்டை தள்ளிவைக்க வேண்டும் என போலீசார் கூறியிருந்தனர். இதனையடுத்து மாநாடு நடக்கும் தேதியை கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பார் என அக்கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று, தவெகவின் மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் கூறியுள்ளார்.