உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 28, 2026 08:06 PM
ADDED : அக் 28, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
சென்னை: ‘பணி நேரத்தில், பள்ளி வளாகத்தை விட்டு, வெளியே செல்லக் கூடாது’ என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி வேலை நேரத்தில், ஆசிரியர்கள் எவரும் பள்ளி வளாகத்தை விட்டு, உணவு இடைவேளை உட்பட, வெளியே செல்லக் கூடாது. மேலும், பள்ளி சூழலில், அசாதாரண நிகழ்வுகள் நடந்தால், கண்டிப்பாக உயர் அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
