வங்கியில் கோவில் தங்கம் ஆண்டுக்கு ரூ.25 கோடி வட்டி
வங்கியில் கோவில் தங்கம் ஆண்டுக்கு ரூ.25 கோடி வட்டி
ADDED : பிப் 13, 2024 11:48 PM
சென்னை,:''கோவிலுக்கு காணிக்கையாக வரும் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்யும் பணி முடிந்ததும், ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில், அரசு கொறடா கோவி செழியன் கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்:
கருணாநிதி ஆட்சிக்கால அரசாணைப்படி, 2006 முதல் 2010 வரை, கோவில்களுக்கு காணிக்கையாக வந்து, பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்கப்பட்டு, தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டன.
கடந்த, 10 ஆண்டுகளில் அப்பணி நிறுத்தப்பட்டுஇருந்தது.
தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், ஐந்து கோவில்களில் பயன்பாடற்று இருந்த தங்க நகைகளை உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியில், 191.65 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஆண்டுக்கு 4.31 கோடி ரூபாய் வட்டி கிடைக்கிறது.
மேலும், 10 கோவில்களில், 156 கிலோ தங்கம் உருக்காலைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. அவை வரும் 20ம் தேதி அனுப்பப்படும். இத்திட்டத்தில்ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வருமானம்கிடைக்கிறது.
திட்டம் முழுமை பெறுகிற போது, ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் வட்டியாக கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

