மின் வாரியத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு தினம் ரூ.766 ஊதியம்
மின் வாரியத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு தினம் ரூ.766 ஊதியம்
ADDED : நவ 20, 2025 01:17 AM
சென்னை: தமிழகத்தில் மின் வினியோக பணிகள், மின் வாரிய பிரிவு அலுவலகங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, 2,850 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒரு அலுவலகத்தில், உதவி பொறியாளர், போர்மேன் உட்பட, 20 பேர் இருக்க வேண்டும். பல அலுவலகங்களில் பாதி பேர் கூட இல்லை. இதனால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தற்போது, மழைக்காலம் துவங்கி உள்ளதால், மின் சாதன பழுதுகளை விரைவாக சரி செய்ய, சென்னை, காஞ்சிபுரம் தவிர்த்து, மற்ற, 10 மண்டல பிரிவு அலுவலகங்களில், இம்மாதம் முதல், 2026 ஜன., வரை, தற்காலிக ஊழியர்களை நியமிக்க, மண்டலப் பொறியாளர்களுக்கு, மின் வாரியம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.
கடலோரங்களில் தலா ஒரு அலுவலகத்திற்கு நான்கு பேர், மற்ற அலுவலகங்களில் தலா இருவர் நியமிக்கப்படுகின்றனர். அவர் களுக்கு, ஒரு நாளைக்கு 766 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

