போத்தனுாரில் 5 நடைமேடைகளில் கட்டமைப்பு பணிக்கு டெண்டர் வெளியீடு
போத்தனுாரில் 5 நடைமேடைகளில் கட்டமைப்பு பணிக்கு டெண்டர் வெளியீடு
UPDATED : அக் 07, 2026 09:17 PM
ADDED : அக் 07, 2026 09:14 PM
சென்னை: போத்தனுார் ரயில் நிலையத்தில் ஐந்து நடைமேடைகளிலும் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள 4.20 கோடி ரூபாயக்கு தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கோவை ரயில் முனையத்தில் ஏற்படும் இடநெருக்கடி காரணமாக, அடுத்து போத்தனுார் ரயில் நிலையம் முக்கிய முனையமாக இருக்கிறது. இங்கு, ரயில் நிலையம் மேம்பாடு, ரயில்கள் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகள் 150 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இங்குள்ள ஐந்து நடைமேடைகளில், ரயில்கள் பெட்டிகளில் நீர் ஏற்றும் வசதி போன்ற பணிகள் மேற்கொள்ள 4.20 கோடி ரூபாய் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, ஒப்பந்தாரரை தேர்வு செய்து, பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில்கள் இயக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
