விவசாயிகளிடம் சூரியசக்தி மின்சாரம் வாங்க 'டெண்டர்'
விவசாயிகளிடம் சூரியசக்தி மின்சாரம் வாங்க 'டெண்டர்'
ADDED : நவ 28, 2025 07:04 AM

சென்னை : விவசாயிகளிடம் இருந்து, 420 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை, 'யூனிட்' அதிகபட்சமாக, 3.10 ரூபாய்க்கு வாங்க, தமிழக மின் வாரியம், 'டெண்டர்' கோரி உள்ளது.
நாட்டில் உள்ள விவசாயி களுக்கு, வேளாண் சாகுபடியால் மட்டுமின்றி, மின்சாரம் வாயிலாகவும் ஆண்டு முழுதும் வருவாய் கிடைக்க, பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் நிலத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மாநில மின் வாரியங்கள் கொள்முதல் செய்யும்.
தமிழகத்தில் உள்ள விவசாயி, விவசாய குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழு ஆகியோரிடம் இருந்து, 420 மெகாவாட் மின்சாரம் வாங்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், நேற்று, 'டெண்டர்' கோரியுள்ளது.
ஒரு யூனிட் மின் சாரத்தை அதிகபட்சமாக, 3.10 ரூபாய்க்கு வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இந்த விலை அல்லது அதற்கு குறைவாக விலைப்புள்ளி வழங்குவோரிடம் இருந்து மின்சாரம் வாங்கப்பட உள்ளது.

