ADDED : டிச 13, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உணவுப் பொருட்கள், தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, விவசாய பிரதிநிதிகள் அடங்கிய, வேளாண் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்படும்' என, கடந்த 2021ல் தேர்தல் வாக்குறுதியாக சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்?
ஒரு புறம், கொடுத்த வாக்குறுதியை கிடப்பில் போட்டு, மறுபுறம் விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னைகளை இரட்டிப்பாக்கியது தான், உங்களின் நான்கரை ஆண்டு கால தி.மு.க., அரசின் சாதனை. விவசாயிகளுக்கு கொடுத்த இன்னல்கள் எண்ணில் அடங்காதவை. தி.மு.க., அரசை துாக்கி எறிய, விவசாயிகள் தயாராகி விட்டனர்.
- நயினார் நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

