ADDED : நவ 13, 2025 01:51 AM
'சார்' என்றாலே, தி.மு.க.,வுக்கு பயம். முதலில் அண்ணா பல்கலைக்கழக 'சார்', இப்போது, வாக்காளர் கணக்கெடுப்பு என்ற சார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியில், 9 ஆயிரம் கள்ள ஒட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும், ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 ஆயிரம் கள்ள ஒட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
'மனிதனை மனிதன் சாப்பிடுகிறான்' என்ற பாடல் வரிகளை போல, டெல்டாகாரன் என கூறிக் கொள்ளும் முதல்வரே, டெல்டாகாரர்களை சாப்பிடுகிறார். ஸ்டாலின் அறிவித்த, 10 ஆயிரம் கோடி ரூபாய் நீர் மேலாண்மை திட்டம்; ஒன்றியம் தோறும் தானிய சேமிப்பு கிடங்கு திட்டம் என எதுவும் இதுவரை செய்யவில்லை.
கரூரில், த.வெ.க., கூட்டத்தில், 41 பேர் இறப்புக்கு காரணம், தி.மு.க., முன்னாள் அமைச்சர். அவரை காப்பாற்ற, இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் சென்று, பிரேத பரிசோதனை நடத்தச் செய்தார்.
- நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

