ADDED : நவ 14, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அரசு, தமிழகத்துக்கு வஞ்சம் இழைக்க முற்படுகிறது. குறிப்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்தை ஏமாற்ற நினைக்கிறார். மேகதாது அணை கட்டும் திட்டம் நிறைவேறினால், தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும்,
இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். ஆனால், தமிழக அரசு, இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனாலேயே, உச்ச நீதிமன்றத்தில், மேகதாது அணை தொடர்பான வழக்கில், முழு சாதகமான நிலையை தமிழகம் எட்ட முடியவில்லை. போடி சட்டசபை தொகுதி, நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. அதை, வரும் தேர்தலில் தி.மு.க., கைப்பற்ற வேண்டும் என, கட்சியினருக்கு முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். அது கனவாகத்தான் இருக்கும். - பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்

