உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 13, 2026 07:14 AM

அ நிறம் | அளவு
சட்டசபையில் சபாநாயகர் பைபிள் படிக்கிறார். அதே நேரத்தில் பகவத் கீதைக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டும். ஹிந்து மதத்தை மிக கேவலமாக விமர்சித்து பேசும் வி.சி.க.,வைச் சேர்ந்த வன்னி அரசு, இப்போது அமைச்சர் ஆகியுள்ளார். அவர், 'குண்டு வைத்தவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும்' என்கிறார்.
முதல்வர் விஜயை பொறுத்தவரை, பிற கட்சிகளுடன் கூட்டணியும் வேண்டும், அவர்கள் சொல்வதையும் கேட்கவும் வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறார். 'தமிழ்த்தாய் வாழ்த்தா; வந்தே மாதரமா' என்பது உள்பட, பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தான் இந்த ஆட்சி நடக்கிறது. 'கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை' என்ற நிலையில் முதல்வர் இருக்கக் கூடாது'
அதே நேரத்தில், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்காக முதல்வர் கொண்டு வரும் திட்டங்களை வரவேற்கிறோம். ஊழல் வழக்குகள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அர்ஜுன் சம்பத், நிறுவனத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி
