ADDED : நவ 06, 2025 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பெறப்பட்ட, 49,429 கோரிக்கை மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 'விடுபட்டோர் எல்லாருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்த, இரு தினங்களிலேயே, தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது.
இப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'தகுதியற்றவர்கள்' என்ற போர்வையில், 40 சதவீத மனுக்களை நிராகரித்து, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத்தொகையா? ஏற்கனவே, ஆட்சி பொறுப்பேற்று, 28 மாதங்களுக்கு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது போதாதென்று, தங்கள் கணக்குபடி, 'தகுதியான' மகளிர் ஒவ்வொருவருக்கும், 28,000 ரூபாயை தராமல் ஏமாற்றியது போதாதென்று, பெண்களை வஞ்சிப்பது ஏன்?
- நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

