ADDED : அக் 31, 2025 01:11 AM
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு தி.மு.க., -- காங்., கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், நேரு காலம் முதல் 10 முறை இந்த பணி நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், பீஹாரை பார்,  டில்லியை பார், பெங்களூரை பார் என சொல்கிறார்; தமிழகத்தை பார்ப்பதில்லை. அவர், தோல்வி பயத்தில் இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் பழைய நண்பர்கள் என்ற முறையில் ஒரே காரில் சென்று இருப்பர். பா.ஜ., அரசின் பழிவாங்கும் செயலால் அமலாக்கத்துறை 'ரெய்டு' நடப்பதாக கூறுகின்றனர். ஆனால், அமலாக்கத்துறை, தேர்தல் கமிஷன் ஆகியவை தனி அமைப்புகள். இரண்டும் அரசிற்கு தொடர்பு இல்லாதவை. இது தி.மு.க., -காங்கிரசுக்கு தெரியவில்லை.
மகளிர் உரிமைத்தொகையை, விடுபட்டவர்களுக்கும் கொடுப்போம் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். தமிழகத்தில் இருக்கும் தி.மு.க., ஆட்சிதான் விடுபடப்போகிறது.
- நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

