ADDED : செப் 29, 2025 06:19 PM

மதுரை மீனாட்சியம்மன் இன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு நேரக் கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றான் மகிஷாசுரன். தவ வலிமையால் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சரணடைந்தனர்.
ஆதிபராசக்தியை தஞ்சமடைவதே வழி என மூவரும் ஆலோசனை கூறினர். தேவர்கள் அம்பிகையைச் சரணடைய அவள் துர்கையாக உருவெடுத்தாள். சிவனிடம் சூலாயுதம், விஷ்ணுவிடம் சங்கு, சக்கரம், பிரம்மாவிடம் கமண்டலம், தாமரை மலரை பெற்றுக் கொண்டாள். சிங்க வாகனத்தின் மீது அமர்ந்து அசுரனுடன் போரிட்டு வெற்றி பெற்று மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். இக்கோலத்தை தரிசித்தால் தீய சக்திகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்.
பாட வேண்டிய பாடல்தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கேநெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.