கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை
கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை
ADDED : செப் 29, 2025 02:13 AM
திருவாடானை: ''தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே கூறி ஒரு கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை,'' என, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி கூறினார்.
அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சமீபகாலமாக அறிவிக்கக்கூடிய பல அறிவிப்புகள் அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது. தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே கூறி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. இதனை நாங்கள் சட்ட பூர்வமாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
ஜனநாயத்தில் பலதரப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக தான் அரசியில் கட்சிகள் தொடங்கப்படுகின்றன. தேர்தலில் களம் காண்கிற போது கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிடக்கூடிய அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது. அதற்காக நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இண்டியா கூட்டணியில் தி.மு.க., இருப்பதால் 2026 சட்டசபை தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி இண்டியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் என்றார்.