ADDED : அக் 27, 2025 12:52 AM
பீஹார் மாநில சட்டசபை தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, அம்மாநிலத்தில் தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
இதில், சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகளவில் நீக்கப்பட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதனால், நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ள, இந்திய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, இன்று முறைப்படி வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சி தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
அறிவிப்பு வெளியானதும், இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளது.

