ஒரே நாளில் ரூ.274 கோடி அரசுக்கு வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை
ஒரே நாளில் ரூ.274 கோடி அரசுக்கு வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை
ADDED : செப் 06, 2025 12:58 AM
சென்னை:சுபமுகூர்த்த நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில், 274 கோடி ரூபாய் வருவாயை பதிவுத் துறை ஈட்டியுள்ளது. இதுவே, இந்த நிதியாண்டில் , ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிக வருவாய்.
இதுகுறித்து, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான இம்மாதம் 4ம் தேதி, ஒரு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு, 100க்கு பதில், 150 முன்பதிவு, 'டோக்கன்'களும், இரண்டு சார் - பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு, 200க்கு பதில், 300 டோக்கன்களும் வழங்கப்பட்டன.
இதன் வாயிலாக, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, இந்த நிதியாண்டில் ஒரே நாளில், 274.41 கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் அதிக அளவாக, இந்தாண்டு ஏப்ரல், 30ம் தேதி ஒரே நாளில் அரசுக்கு, 272.32 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.