ADDED : அக் 06, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்துாரில், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த துாய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் குப்பன், விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மூன்று துாய்மைப் பணியாளர்களின் உயிரைப் பறிகொடுத்து, 10 நாள் கூட ஆகவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியில், மீண்டும் ஒரு உயிரைப் பறிகொடுத்திருக்கிறோம். நாட்டிலேயே துாய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு, தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை, தி.மு.க., அரசு உறுதி செய்யாமல் இருக்கிறது. துாய்மைப் பணியாளர்களை, தி.மு.க., அரசு படுகொலை செய்து கொண்டிருக்கிறது.
- அண்ணாமலை , முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,