அழைப்பு விடுத்தார் அமைச்சர் உடனே வந்த அ.தி.மு.க.,வினர்
அழைப்பு விடுத்தார் அமைச்சர் உடனே வந்த அ.தி.மு.க.,வினர்
ADDED : ஏப் 04, 2025 01:05 AM
சென்னை:வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சட்டசபைக்கு விரைந்து வந்தனர்.
சட்டசபையில் நேற்று வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய, அத்துறையின் அமைச்சர் பன்னீர்செல்வம், ''வேளாண் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர், என் பதிலை கேட்க, இப்போது சட்டசபையில் இல்லை.
''அவர்கள் இருவரும் விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்தவர்கள்,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, சில நிமிடங்களில் இருவரும் சட்டசபைக்கு வந்து அமர்ந்தனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''வேளாண் அமைச்சர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், பொள்ளாச்சி ஜெயராமனும் சட்டசபைக்கு வந்து விட்டனர்,'' என்றார்.

