ADDED : மே 29, 2025 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வழக்கை துரிதமாக நடத்தி, ஐந்தே மாதங்களில் நீதியை பெற்று தந்துள்ளது, நம் காவல் துறை. விசாரணை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் நன்றி.
குற்றம் நடக்கக் கூடாது; குற்றம் நடந்தால் குற்றவாளியும் தப்பக் கூடாது. விசாரணையை துரிதமாக நடத்தி, தண்டனை பெற்று தர வேண்டும் என, காவல் துறையினரிடம் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். குற்றங்களின் கூடாரமாக அரசை நடத்தி, அவதுாறுகளை அள்ளி தெளித்து, மலிவான அரசியல் செய்ய துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டத்தையும், நீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்த நாளும் உறுதிசெய்வோம்.
- ஸ்டாலின்
முதல்வர்

