தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஓய்வூதியதாரர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியதாரர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியதாரர்கள் மனித சங்கிலி போராட்டம்

1


ADDED : நவ 18, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 06:32 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று (நவ.,18) ஓய்வூதியதாரர்கள், மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

சென்னை சிவானந்தா சாலையில், தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. இதில், ஓய்வூதியர்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ‘ஓய்வூதிய சரிபார்ப்பு சட்டம் – 2025’ஐ திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் மாதாந்திர மருத்துவ படியை, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட, 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us