ADDED : நவ 17, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக, ஊடகங்கள் விளங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு:
எந்தவொரு மக்களாட்சியிலும், அதிகாரத்தில் உள்ளவர்களால் தன்னாட்சி அமைப்புகள் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும். மத்திய பா.ஜ., அரசின் எதேச்சதிகாரத்துக்கு அடிபணியாமல், அவர்களது தோல்விகளையும், மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்களை தேசிய பத்திரிகை நாளில் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

