ADDED : ஏப் 02, 2025 02:01 AM
சென்னை:சர்வதேச நிலவரங்களால் பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,425 ரூபாய்க்கும், சவரன், 67,400 ரூபாய்க்கும் விற்பனையானது. மாலையில் கிராம், 8,450 ரூபாய்க்கும், சவரன், 67,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 113 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 8,510 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 68,080 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 114 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து உள்ளது.