sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அமரன்' படத்துக்கு எதிரான போராட்டம் சதி செயலுக்கான முன்னோட்டம்

/

'அமரன்' படத்துக்கு எதிரான போராட்டம் சதி செயலுக்கான முன்னோட்டம்

'அமரன்' படத்துக்கு எதிரான போராட்டம் சதி செயலுக்கான முன்னோட்டம்

'அமரன்' படத்துக்கு எதிரான போராட்டம் சதி செயலுக்கான முன்னோட்டம்

4


ADDED : நவ 10, 2024 07:52 AM

Google News

ADDED : நவ 10, 2024 07:52 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக நடக்கும் போராட்டம், சதிசெயலுக்கான முன்னோட்டம்' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து, அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:


சமீபத்தில் வெளிவந்த 'அமரன்' திரைப்படம், ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது. அப்படத்தை பார்த்த, ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்துகிறது. தன்னலமற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமிக்க தியாக வாழ்க்கையை பார்த்து, கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை.

அவ்வகையில், ஏராளமான ஆன்மிக மற்றும் தேசபக்தி படங்கள் வெளிவந்து கொண்டிருந்த, தமிழக திரைத்துறையில், பத்தாண்டுகளாக தொடர்ந்து இன, மொழி, பிராந்திய, வெறுப்பு படங்கள் மற்றும் பிரிவினைவாதத்தை முன்னிறுத்தும் தேச விரோத படங்கள் அதிகம் வெளிவரத் துவங்கி விட்டன. இதுபோன்ற சூழலில், நம் நாட்டு ராணுவ வீரர்களின் தியாகத்தையும், தேச பக்தியையும் எடுத்துகாட்டும் வகையில் 'அமரன்' படம் வெளியாகியுள்ளது.

அதே நேரம், தமிழகத்தில் சில இடங்களில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னிறுத்தும் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், 'அமரன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அந்நிகழ்வில் கலந்து கொண்டாரில் சிலர், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். கூடவே, காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகளை போராளிகள், தியாகிகள் என்ற கருத்து திரிப்பையும் வாசித்துள்ளனர்.

இதெல்லாம் பிரிவினைவாதத்தை ஊட்டும் திட்டமிட்ட சதிசெயல்கள் என்பதை தமிழக போலீஸ் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாக்க இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும், பிரிவினைவாத அமைப்புகளும், அமரன் படத்தை வைத்து, தீவிரமான சதி செயலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து, துவக்கத்திலேயே ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us