திருமண பதிவு சான்றிதழ்களில் பிழை திருத்தம் செய்ய அலைய வேண்டிய நிலை
திருமண பதிவு சான்றிதழ்களில் பிழை திருத்தம் செய்ய அலைய வேண்டிய நிலை
ADDED : நவ 20, 2025 01:18 AM
சென்னை: திருமண பதிவு சான்றி தழ்களில் காணப்படும் பிழைகளை சரிசெய்ய, சார் - பதிவாளர்கள் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சார் - பதிவாளர் அலுவலகங்களில், திருமண பதிவு செய்யும் பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டதாக பதிவுத் துறை அறிவித்தது.
கூடுதல் பிரதி ஆனால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவுக்கான விண்ணப்பம், ஊழியர்களால் பெறப் படுகின்றன. பதிவு முடிந்த நிலையில், சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் கொடுத்து பதிவு செய்யப்பட்ட நிலையில், திருமண பதிவு சான்றிதழ்களை பெறுவதில், பிரச்னைகள் ஏற்படுகின்றன. அப்படியே ஆன்லைன் முறையில் சான்றிதழ் பிரதி எடுத்தாலும், அதில் எழுத்து பிழைகள் காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
திருமண சான்றுகள் ஆன்லைனில் இருக்கும் என்பதால், தேவை ஏற்படும்போது கூடுதல் பிரதி எடுத்து கொள்ளலாம் என, மக்கள் நினைக்கின்றனர். அப்படி கூடுதல் பிரதிகள் எடுத்தால், அதில் பிழைகள் காணப் படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த எஸ். வைத் தியநாதன் கூறியதாவது:
திருமண பதிவு சான்றிதழ்கள் ஆன்லைன் முறையில் கிடைப்பது நல்லது தான். ஆனால், அதில் பிழைகள் இருப்பது பிரச்னையை ஏற்படுத்தும். உதாரணமாக, திருமண தேதி சரியாக இருக்கும். பதிவு தேதி, முதல் முறை எடுக்கும் பிரதியில் ஒன்றாகவும், கூடுதல் பிரதியில் பதிவு தேதி வேறாகவும் காணப்படுகிறது.
கண்காணிப்பு இதே போன்று, முதல் பிரதியில் பெயரில் அனைத்து எழுத்துக்களும் சரியாக இருக்கும்; கூடுதல் பிரதி எடுக்கும்போது, அதில் சில எழுத்துக்கள் விடுபட்டு இருக்கும். இதுகுறித்து சார் பதிவாளரிடம் புகார் தெரிவித்தால், சரி செய்ய அலைய விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருமண பதிவு சான்றுகளில் பிழைகள் இருந்தால், அதை உடனுக்குடன் சரி செய்யலாம்; அதற்கான நடவடிக்கைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும்' என்றார்.

