ADDED : ஜன 11, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, அவல்பூந்துறை அருகே வேலாங்காட்டுவலசையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். என்.ஆர்., என்ற பெயரில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம், பல மாநிலங்களில் ஒப்பந்த பணிகள் எடுத்து செய்கிறார்.
வருமான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஜன.7ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.

