ADDED : ஜன 28, 2026 08:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'விசில்' பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அது கொஞ்ச நேரம் தான் கேட்கும். எவ்வளவு வேகமா வருதோ அவ்வளவு வேகத்தில் மறைந்துவிடும்.
பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. பள்ளி வாசலிலேயே போதை பொருட்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இதனால், பெண் பிள்ளைகள் மட்டுமின்றி, சிறுவர்களைக் கூட பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் தடுக்கப்படவில்லை.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, விவசாயிகள் நலனுக்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். தி.மு.க., ஆட்சியில், விவசாயிகளுக்கு முறையான பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே அறியாதவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
- கடம்பூர் ராஜு,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

