ADDED : நவ 23, 2025 01:06 AM
'ஏன் இரவு நேரத்தில் நண்பருடன் சென்றாய்; தனியாக ஏன் செல்கிறாய்?' என, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை நோக்கி கேள்வி கேட்கின்றனர். அப்படி கேட்பது ஒருவிதமான மன நோய். லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் போட்டியிட்ட நான் தோற்றுப் போனேன். இருந்தாலும்,
தேர்தலுக்கு பின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றேன். ஆண்கள் பலர் கண்ணீரோடு நின்றனர். ஆனால், பெண்கள்தான் எனக்கு ஆறுதல் கூறினர். தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, 'ஆண்கள் சரியாக வாக்களித்து விடுவர்; ஆனால், பெண்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விடுவர்' என ஒரு பெண் என்னிடம் கூறினார். தேர்தல் முடிவுகளைப் பார்த்தபோது, அந்தப் பெண் சொன்னதே நடந்திருந்தது. பல இடங்களில், பெண்கள் காலை வாரி இருந்தனர். தமிழக அரசு, பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. அது எத்தனை நாட்களுக்கு தொடர்ச்சியாக கொடுக்க முடியும் என தெரியவில்லை.
- சவுமியா,
தலைவர், பசுமைத் தாயகம்

