sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது: நுகர்வோர் கோர்ட் போனால் எல்காட் பதில் சொல்ல வேண்டும்

/

'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது: நுகர்வோர் கோர்ட் போனால் எல்காட் பதில் சொல்ல வேண்டும்

'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது: நுகர்வோர் கோர்ட் போனால் எல்காட் பதில் சொல்ல வேண்டும்

'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது: நுகர்வோர் கோர்ட் போனால் எல்காட் பதில் சொல்ல வேண்டும்

34


UPDATED : ஜன 09, 2026 10:45 PM

ADDED : ஜன 09, 2026 08:51 PM

Google News

UPDATED : ஜன 09, 2026 10:45 PM ADDED : ஜன 09, 2026 08:51 PM

34


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தமிழக அரசு வழங்கிய, இலவச லேப்டாப்பில் அச்சிடப்பட்டுள்ள, கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் படத்தை நீக்கினால், அதற்கான 'வாரண்டி' கிடைக்காது' என, 'எல்காட்' நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கும் பணியை, கடந்த 5ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 'லேப்டாப்' மேற்புறத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

இதை விரும்பாத சில மாணவர்கள், அவற்றை அழித்துவிட்டு, தங்களுக்கு பிடித்தவர்களின் படங்களை ஒட்டி, சமூக வலைதளங்களில், பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறு, லேப்டாப் மேற்புறம் உள்ள படத்தை நீக்கினால், மாணவர்கள் லேப்டாப்பிற்கான 'வாரண்டி' எனப்படும், பழுது நீக்குவதற்கான உத்தரவாதத்தை பெற முடியாது என, எல்காட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, லேப்டாப்புக்கு ஓராண்டு, 'வாரண்டி' சலுகை உள்ளது. அதை பெற, லேப்டாப் மேற்புறம் உள்ள படம், கட்டாயம் இருக்க வேண்டும். அதில் உள்ள 'சீரியல்' எண் இருந்தால் மட்டுமே, பிரச்னை இல்லாமல் 'சர்வீஸ்' செய்து தர முடியும். இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அரசு வழங்கும் வாரண்டியை பெற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உற்பத்தியாளரே பொறுப்பு

பொதுவாக ஒரு பொருட்களுக்கு உற்பத்தியாளர்களே நேரடியாக அல்லது டீலர்கள் மூலம் வாரண்டி வழங்குவார்கள். ஆனால், தமிழக அரசு வழங்கிய லேப்டாப்களுக்கான வாரண்டி குறித்து, அதனை தயாரித்த எச்பி அல்லது டெல் அல்லது லெனோவா ஆகிய நிறுவனங்கள் தான் கூற வேண்டும். வாரண்டி குறித்து எல்காட் கூற முடியாது. வாரண்டிக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உற்பத்தியாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us