ADDED : நவ 16, 2026 07:27 PM
சேலம்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, சேலத்தில் இன்று (நவ.,16) அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை, த.வெ.க., அரசு சீர்படுத்தவில்லை. நிர்வாகத்தையும் ஒழுங்குபடுத்தவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கள்ளக்குறிச்சி எம்.எம்.ஏ., அந்த மாவட்ட கலெக்டருக்கு தவறான தகவல் அனுப்பி உள்ளார். அதன் மீது நடவடிக்கை இல்லை. அதனால் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதனால் கலெக்டருக்கும் பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
கர்நாடக முதல்வர், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றார். அதற்கும் தமிழக முதல்வர் வாய்மூடி கிடக்கிறார். மாற்றம் வேண்டும் என்று தான் மக்கள், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். அதன்மூலம் தமிழகத்தை முன்னோக்கி அழைத்துச்செல்லாமல், விஜய் அரசு பின்நோக்கி செல்கிறது. விஜய், முழுமையான முதல்வராக செயல்பட வேண்டும். அரசு பணியாளர்களை போல, காலையில் வந்து மாலையில் வீடு திரும்புவது போல் இருக்கக்கூடாது.
‘அரோகரா’ என விஜய்க்கு சொல்வது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வழிபாட்டில் இதுபோன்ற ஒழுங்கீனம் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
