2026ல் ஆட்சி மாற்றமும் ஏற்படும்; குன்றின் மீது தீபமும் ஏற்றப்படும்: காரைக்குடியில் எச்.ராஜா பேட்டி
2026ல் ஆட்சி மாற்றமும் ஏற்படும்; குன்றின் மீது தீபமும் ஏற்றப்படும்: காரைக்குடியில் எச்.ராஜா பேட்டி
ADDED : ஜன 17, 2026 06:11 AM

காரைக்குடி : தமிழகத்தில் 2026 மே ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என காரைக்குடியில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்திற்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு விரோதமாகவும் காங்., --- தி.மு.க., கட்சிகள் செயல்பட்டன. ஆனால் தற்போது ஆதரவாக செயல்பட கூடிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் யார் இடம் பெற வேண்டும் என்பதை இரு கட்சியின் தலைமை பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யும். தி.மு.க.,வை தோற்கடிக்க, தினகரன் தே.ஜ.,கூட்டணியில் இருக்க வேண்டும்.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கேட்டது விஜய் தான். நீதிமன்ற உத்தரவை மதித்து அரசு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும். 2026 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது மலை உச்சியில் தீபம் ஏற்றுவது உறுதி என்றார்.

