உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 13, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக சட்டசபையில், இம்மாதம் 5ம் தேதி பொது பட்ஜெட், 6ம்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 7ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது.
கடந்த 8, 9ம் தேதி அரசு விடுமுறை காரணமாக, சட்டசபை நடக்கவில்லை. கடந்த 10, 11ம் தேதிகளில், பட்ஜெட் மீது விவாதம் நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோர், நேற்று பதிலுரை வழங்கினர்.
அத்துடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. மீண்டும் சட்டசபை 17ம் தேதி கூடும் என, சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார். அன்று முதல், துறைவாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.
