ADDED : டிச 08, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த தேர்தலில் தி.மு.க., அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் கூறி வருகிறது.
வாழை, கரும்பு விவசாயிகளுக்காக சேமிப்பு கிடங்குகள்; கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு திட்டங்கள்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 25 சதவீதம் மானியம் என அறிவித்து விட்டு எதையும் செய்யவில்லை. ஆனால், மத்திய பா.ஜ., அரசு எதை கொடுத்தாலும், அதில் தன் ஸ்டிக்கரை மட்டுமே தி.மு.க., அரசு ஒட்டி, விளம்பரப்படுத்திக் கொள்கிறது.
தமிழக அமைச்சர்களில், 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை.
ஆன்மிகத்திற்கு எதிரான அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்லும் தி.மு.க., அரசுக்கு, உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிப்பது போல், வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்.
- நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,

