அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்று முறிந்து போயினர்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்
அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்று முறிந்து போயினர்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ADDED : அக் 25, 2024 10:55 AM

சென்னை: 'அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்று சிலர் முனை முறிந்து போயினர்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாகவே நான் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் பலரும், அவரவர் துறை சார்ந்த மற்றும் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்திருந்தனர்.
அதனை நானும் துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. நானும், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று பணியாற்றியதை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
எதிர்வரிசையிலே இருப்பவர்கள், திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.