ஒன்னும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டு போயிட்டாங்க; அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துரைமுருகன்!
ஒன்னும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டு போயிட்டாங்க; அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துரைமுருகன்!
ADDED : ஜன 04, 2025 07:40 PM

சென்னை; 'ஒன்னும் இல்லை என்று எழுதி கொடுத்துவிட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று விட்டார்கள்' என அமைச்சர் துரைமுருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
வேலுாரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி., கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று (ஜன., 03) சோதனை நடத்தினர். முன்னதாக, கதிர் ஆனந்த், துபாய் சென்றுள்ளதாலும், அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்ததாலும் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அதிகாரிகள் காலை, 7:00 முதல், மதியம், 2:18 மணி வரை வீட்டின் வெளியே காத்திருந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகே, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (ஜன., 04) தன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, காரில் இருந்த படியே, அமைச்சர் துரைமுருகன், 'வந்தாங்க, ஒன்னும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டு போயிட்டாங்க' என பதில் அளித்து விட்டு சென்றார்.

