ADDED : ஆக 11, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய்மை பணியாளர்களின் போராட்டத்தை திசை திருப்ப, தி.மு.க., கொடுத்த வேலையை திருமாவளவன் செய்கிறார். எம்.ஜி.ஆர்., வறுமையில் பிறந்து, கடுமையாக உழைத்து, மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். ஜாதி கடந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் தான், மக்கள் இன்றும் அவரை நேசிக்கின்றனர். திருமாவளவனின் பேச்சு, வன்மத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. கருணாநிதியை தியாகியாக காட்ட, திருமாவளவன் முயல்வதை பார்க்கும்போது, காமெடியாக உள்ளது. தி.மு.க., சார்பு அணி தலைவரை போல், திருமாவளவன் பேசி வருவதை, விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கூட விரும்பவில்லை.
அறிவாலயத்திற்கு காவடி துாக்குவதை முழுநேர வேலையாக செய்து வரும் திருமாவளவனுக்கு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேச தகுதியில்லை.
- ஜெயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,