தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/துாத்துக்குடி ராமநாதபுரத்தில் இன்று கனமழை பெய்யும்

துாத்துக்குடி ராமநாதபுரத்தில் இன்று கனமழை பெய்யும்

துாத்துக்குடி ராமநாதபுரத்தில் இன்று கனமழை பெய்யும்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: துாத்துக்குடி, ராமநாதபுரத்தில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நேற்று, 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்செந்துார், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில், தலா, 6 செ.மீ., மழை பெய்தது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால் துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிற மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us