'புது கட்சி துவங்குபவர்கள் எம்.ஜி.ஆர்., செல்வாக்கை திருடப்பார்க்கின்றனர்': முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
'புது கட்சி துவங்குபவர்கள் எம்.ஜி.ஆர்., செல்வாக்கை திருடப்பார்க்கின்றனர்': முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
ADDED : செப் 16, 2025 12:16 AM
சிவகாசி; சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பழனிசாமி அ.தி.மு.க.,வை வழி நடத்தி வருகிறார். புதிதாக கட்சி துவங்குபவர்கள் படத்தைப் போட்டு எம்.ஜி.ஆரின் செல்வாக்கை திருடப்பார்க்கின்றனர். எம்,ஜி.ஆர்., படம், பெயரை பயன்படுத்த தகுதி உள்ள கட்சி அ.தி.மு.க., மட்டுமே. திரை நட்சத்திரங்களை பார்க்க கூட்டம் கூடுவது இயல்பு. அவர்கள் ரசிகர்கள் தானே தவிர தொண்டர்கள் கிடையாது.
அவர்களை வைத்து ஒரு இயக்கத்தை பக்குவமாக நடத்த இயலாது. அந்த கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மட்டுமே கிளைகள் தோறும் கட்டமைப்பு உள்ளது. வேறு கட்சிகள் கூட்டணி சேரலாமே தவிர, தனியாக நின்றோ, 3வது அணி அமைத்தோ வெற்றி பெற முடியாது. பழனிசாமி சொல்வது மட்டுமே கூட்டணியின் வேத வாக்கு. வேறு யாரின் கருத்தையும் பொருட்படுத்த முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

